தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இந்த மழை இயல்பைவிட 15 சதவீதம் அதிக அளவு இருக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் 2 நாட்களுக்குமுன்பு தெரிவித்தார்.
இந் நிலையில் இந்திய வானிலை மையம் தமிழ்நாட்டிற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கேரளாவிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கும் ரெட் அலர்ட் என்றதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகின்றது. மேலும், தமிழகத்தில் வரும் 6ம் தேதி கனமழையும், 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் மிக, மிக கனமழை பெய்யும் என்றும், 25 செ.மீ.க்கு மேல் மழை கொட்டும் என்றும் நீலகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கோவை மாவட்டங்களில் இது தீவிரமாக இருக்கும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள் சரிவர தூர் வாரப்படாமல் உள்ள நிலையில் வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வரும் 5-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் புதிதாக உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து பின்னர் புயலாக மாறும்.
அதேபோல் வரும் 8-ஆம் தேதி மற்றோரு காற்றழுத்த தாழ்வுபகுதி தென்மேற்கு வாங்க கடலில் உருவாகும் எனவும் இதனால் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தொடர்ந்து 5 நாட்கள் கனமழைக்கும், மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பப்பதால் தமிழகத்திற்கு 7-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.