திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வரும் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்களை கருத்தில் கொண்டும், பொன்மலை, பொன்மலைப்பட்டி, மேலகல்க்கண்டார்கோட்டை, கொட்டப்பட்டு, காட்டூர், செம்பட்டு போன்ற பகுதிகளில் வாழும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க பொன்மலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பதிவு டிக்கெட் மையம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இந்த முன்பதிவு டிக்கெட் மையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு எந்தவித முன்னறிவிப்பின்றி திடீரென மூடப்பட்டது. இதையடுத்து முன்பதிவு செய்ய வந்த பயணிகளும், தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவுக்கு வந்தவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
எனவே, பொன்மலை ரயில் நிலையத்தில் மூடப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.