சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார். கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 5 முறை முதல்வராக இருந்தவர் , தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார். அரசின் சார்பாக மருத்துவ உதவிகள் கேட்டால் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம்.
புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம், சிகிச்சை விவரம் குறித்து காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன். கருணாநிதி விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன். என கூறினார்.