காபூல்,
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகிலுள்ள பாக்ஹ் இ தாவோத் பகுதியில் தேசிய பாதுகாப்புத்துறை இயக்கத்தை குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. காலை 5 மணிக்கு நடந்த இத்தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 10 உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் சம்பவம் குறித்து காபூல் முதன்மை போலீஸ் அதிகாரி ஹஷ்மாட் ஷ்டானேக்ஸாய் கூறுகையில்,
“தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். மற்ற விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியாகும்” எனக் கூறினார். இந்நிலையில் தலீபான் இயக்கம் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.