கோயமுத்தூர் சுந்திராபுரம் ஐயர் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் அருகே ரோட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தவர்கள் மீது கட்டுபாடு இழந்த அவ்டி கார் மோதியது. இதில் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ ஒன்று அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.