கோவையை அடுத்த சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம் மீது அங்கு பணிபுரிந்த பல பெண்களிடம் பாலியல் ரீதியாக பல்வேறு தொல்லைகளைச் செய்து வந்துள்ளார் என்ற பகீர்க் குற்றச்சாட்டு தற்போது கிளம்பியுள்ளது.
கல்லூரி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இளம்பெண்களை பின்னால் சென்று இறுக்கிப் பிடித்துக் கட்டியணைப்பதும், முத்தம் கொடுப்பதுமாக இருந்து வந்துள்ளார். அந்தக் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தத் தனக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அப்படிப்பட்டத் தொல்லைகளைத் அவர் தந்து வந்தார் என்று கூறுகிறார், கூரிஷ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இது பற்றிக் கூரிஷ்மா விவரிக்கையில் தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பணிக்கு வரும் இளம் பெண்கள் பலர் இவரது பாலியல் தொந்தரவு பொறுக்க முடியாமல் வேலையை விட்டு சென்றுள்ளனர். குடும்பச் சூழ்நிலை காரணமாக தன்னால் அப்படிச் செய்ய முடியாத நிலையில் வேலைக்குச் சென்று வந்ததால் கடந்த இரண்டு வருடமாக நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியத்தின் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்குப் பலமுறை ஆளாக நேர்ந்ததது என்று தெரிவிக்கிறார்.
“பாலியல் தொந்தரவுக்கு ஆளான இளம் பெண்கள், தாளாளரின் மகனும் கல்லூரியின் தலைமை நிர்வாகி நளனிடம் இது தொடர்பாகப் பல்வேறு புகார்களை அளித்துள்ளனர். ஆனால் அவர்களின் புகார்களுக்கு ஆதாரதத்தினைத் தந்தால் மட்டுமே நடவடிக்கை என கல்லூரி நிர்வாகம் தட்டிக் கழித்து வந்தது.
எம்.டி. என்னைத் துரத்திப் பிடித்து அத்துமீறும் காட்சியை என்னுடைய செல்போன் காமிரா மூலம் நான் பதிவு செய்து அதனை ஆதாரமாகத் தந்தேன். அதற்கும் மவுனமே பதிலாகக் கிடைத்தது. இது தொடர்பாக நிர்வாக இயக்குநரின் மகனும் கல்லூரியின் தலைமை நிா்வாகியுமான நளினுக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அனுப்பினேன். ஆனால், அவரோ வீடியோவில் இருப்பது நானே இல்லை என்று சொல்லச் சொன்னார்.
மீண்டும் நளினுக்கு ஒரு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பினேன். அதில், “சார் உங்கள நம்பிதான் எம்டி சார் கொடுத்த செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு அமைதியாக இருந்தேன். நேத்து கூட நீங்க பேசும் போது வீடியோல இருக்கிறது நான் இல்லைனு சொல்லச் சொன்னீங்க. எனக்கு ஏதாச்சும் ஆச்சுனா நீங்களும் எம்டி சாரும்தான் காரணம். என்னால் முடியலை. நான் இருக்கிறது பிரயோஜனம் இல்லை என்று அதில் சொல்லி இருந்தேன்.
ஆனால். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல், சமாதான பேச்சுவார்த்தை மட்டுமே நடந்தது. இது குறித்து கோவை, புதியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தரச் சென்ற நான் மிரட்டப்பட்டேன் என்று தன தரப்பினைத் தெரிவித்துள்ளார் கூரிஷ்மா.
இந்த நிலையில்தான், இது தொடர்பான வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நீதி வேண்டி அவரது நண்பர்கள் பதிவேற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கல்லூரி எம்.டி. சுப்பிரமணியத்தின் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் குறித்த வீடியோ காட்சிகள் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.