ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கலைக்கப்பட்டு, விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்ததற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பொன் மாணிக்கவேலுவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையினையும் விட்டுள்ளார்.
பெங்களூருவில் வசித்து வரும் காவல்துறை முன்னாள் அதிகாரியான சித்துராஜ் என்பவர் இதே கோரிக்கையை சற்று வித்தியாசமான முறையில் வலியுறுத்தி உள்ளார். சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கூடாது பொன் மாணிக்கவேல் மீதும் அதே பதவில் அமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இவர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
“சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் சி.பி.சி.ஐ.டி.யால் மட்டுமே திறம்பட செயல்பட முடியும். ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஒரு திறமையான அதிகாரி, கடத்தப்பட்ட எத்த்தனையோ சிலைகளை கண்டுபிடித்திருக்கிறார். அவரது விசாரணையின் கீழ் இருந்த வழக்கை ஏன் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமெனத் துடிக்கிறார்கள்?
திறமைசாலியான ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுவுக்கு பதவி நீட்டிப்புத் தந்து அவரது தலைமையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மீண்டும் விசாரணையை நடத்த வேண்டும் என்பதற்காக பெங்களூருவிலிருந்த சென்னைக்கு நடைபயணம் மேற்கொள்கிறேன். சென்னையில் தலைச் செயலரைச் சந்தித்து எனது கோரிக்கை மனுவினை அளிப்பேன்” என்கிறார் சித்துராஜ்