தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மீண்டு வந்தவர்களை ஒருங்கிணைத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. .
இதில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் பங்கேற்று அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பேசினார்.,
அவர் பேசுகையில், "உடல் நலத்தைப் பேணுவதுபோல, மனநலத்தையும் பேண வேண்டும். உலக அளவில் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 17 சதவீத தற்கொலைகள் நடக்கின்றன" என்ற புள்ளி விபரத்தினைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில்தான் அதிகயளவில் தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. அதில் இளைஞர்களே அதிகம்" என்றார்.